செயற்கை நுண்ணறிவை ஏமாற்றி நம்முடைய பாதுகாப்பை உறுதி செய்யும் புதிய கண்டுபிடிப்பு

செயற்கை நுண்ணறிவை ஏமாற்றும் புதிய கண்டுபிடிப்பு

 

ஹாய் நண்பர்களே இது என்னுடைய முதல் பதிவு.

இப்ப நாம பாக்கப் போற பதிவு செயற்கை நுண்ணறிவு பற்றிய ஒரு சின்ன புரிதலையும், அதை முறியடிக்கும் சாப்ட்வேர் பற்றி பார்க்க போறோம்.

வருங்காலத்தில், ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் டெக்னாலஜியோட விபரீத முன்னேற்றத்தின் மூலமா நம்ம உலகத்தை ரோபோட்கள் ஆள போகிற நாட்கள் வெகு தொலைவில் இல்லை. எல்லா செயற்கை நுண்ணறிவும் நல்ல விஷயங்களுக்காக மட்டும் பயன்படும் என்று மட்டும் சொல்ல முடியாது, அதிலிருந்து தப்பிப்பதற்காக நாம சில நுண்ணிய ஏமாற்றும் வழிகள் அல்லது தற்காத்துக் கொள்ளும் வழிகளை நாம் கண்டுபிடித்து அதன் மூலம் நம்மை நாமே காக்கும் சூழ்நிலை வரக்கூடும்.

அதுபோல புதிய கண்டுபிடிப்புகள் மூலம் நம்மை நாம் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறோம் என்கிற சிறந்த நோக்கத்தில் இப்பதிவு சில தகவல்களை உங்களுக்கு தரப் போகிறது.

அதற்கு முன்பாக, நான் கண்ட“The Mitchells vs. the Machines” சிறுவர்களுக்கான சயின்ஸ் பிக்ஷன் அனிமேஷன் திரைப்படத்தில் வந்த கடைசிக் காட்சியில் செயற்கை நுண்ணறிவை ஏமாற்றும் வகையில் ஒரு நாயின் உருவத் தோற்றத்தை வைத்து ரோபோக்களை (நாயா அல்லது பன்றியா) எனக் குழப்ப முயற்சித்து அதில் வெற்றி பெறுவதை போல ஒரு காட்சி அமைத்திருந்தனர்.


 

அதனை மெய்ப்படுத்தும் வகையில், சிகாகோ பல்கலைக்கழக ஆராய்ச்சிக் குழுவால் கண்டுபிடிக்கப்பட்ட “Fawkes”
என்கிற புதிய மென்பொருள் நம்முடைய புகைபடங்களை பாதுகாக்க முடியும்.

இந்த மென்பொருளின் வேலையானது, நம்முடைய மாற்றம் செய்யப்படாத புதிதாக எடுக்கப்பட்ட புகைப்படங்களில் கண்களுக்குப் புலப்படாத சிறிய மாற்றங்களை செய்து அதன் மூலம் செயற்கை நுண்ணறிவை குழப்பி, நம்முடைய படங்கள் பொதுவெளியில் வெளியிடப்பட்டாலும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு நம்மை நாமே தற்காத்துக் கொள்ளும் யுக்தி கொண்ட செயலி.

கீழே கொடுக்கப்பட்டுள்ள படங்களில் ஒன்று உண்மையானது, மற்றொன்று Fawkes மென்பொருள் உதவியோடு மாற்றப்பட்டுள்ளது.  அதை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா.. ?




நமது கண்களுக்கு இவ்விரண்டு படங்களும் ஒரே நபர் உடையது என்று தெரியும், ஆனால் செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோட்களுக்கு இது தெரியாது இவ்விரண்டும் வெவ்வேறு படங்கள் எனக் கருதிக்கொள்ளும்.

இதே போல நீங்களும் உங்களுடைய படங்களை நார்மலாக எடுத்து அதை "Cloaking" முறையில் திருத்தம் செய்து இந்த மென்பொருளின் உதவியோடு உங்கள் புகைப்படத்தின் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ளலாம். 

Link: Fawkes

மேலும் இந்த இலவச மென்பொருள் தனது முதல் பதிப்பை இன்று வெளியிடப்பட்டுள்ளது அதனுடைய நிலையான (Stable Release) வெளியீட்டு எண் 1.0 நியமிக்கப்பட்டுள்ளது.

நன்றி.

Comments

Post a Comment

Popular posts from this blog

OpenSSL Latest version gets attention...